சிதம்பரம் முகத்தில் சோர்வு இல்லை: கே.எஸ்.அழகிரி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிதம்பரம் முகத்தில் சோர்வு இல்லை': கே.எஸ்.அழகிரி

Added : நவ 30, 2019 | கருத்துகள் (2)
Share
சென்னை:'நுாறு நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம், நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, அவரது முகத்தில் எந்தவிதமான சோர்வும் இல்லை' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் இருந்த போது, 2007 மே மாதம், ஐ.என்.எக்ஸ்., ஊடக நிறுவனம், அந்நிய முதலீட்டை பெற ஒப்புதல் வழங்கியது குறித்து, 10 ஆண்டுகளுக்கு பின், 2017ல், முதல்


சென்னை:'நுாறு நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம், நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, அவரது முகத்தில் எந்தவிதமான சோர்வும் இல்லை' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:
மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் இருந்த போது, 2007 மே மாதம், ஐ.என்.எக்ஸ்., ஊடக நிறுவனம், அந்நிய முதலீட்டை பெற ஒப்புதல் வழங்கியது குறித்து, 10 ஆண்டுகளுக்கு பின், 2017ல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
அன்றைய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில், சாதாரண நடைமுறையின் கீழ் ஒப்புதல் மட்டும் வழங்கியுள்ளார். ஆனால், பொய் வழக்கு போட்டு, ௧௦௦ நாட்களாக, சிதம்பரத்தை சிறையில் அடைத்துள்ளனர்.
சமீபத்தில், நீதிமன்ற விசாரணைக்கு சிதம்பரம் வந்தபோது, அவரது முகத்தில், எந்தவிதமான சோர்வும் இல்லாமல், மிகவும் மன உறுதியோடு இருக்கிறார் என, அவரை பார்த்தவர்கள் கூறுகின்றனர். எதேச்சதிகார தாக்குதலால், அவர் மனம் சோர்ந்து விட மாட்டார். விரைவில், உச்சநீதிமன்றம் அவருக்கு நீதி வழங்கும். இவ்வாறு, கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X