ஆசிய கால்பந்து போட்டி ஜவகர் பள்ளி மாணவர் பங்கேற்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிய கால்பந்து போட்டி ஜவகர் பள்ளி மாணவர் பங்கேற்பு

Added : நவ 30, 2019
Share


ஆசிய பள்ளிகளுக்கு இடையேயான 47வது கால்பந்தாட்ட போட்டி, இந்தோனேசியா நாட்டில், நவ., 15 ம் தேதி முதல், 25 ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. இப்போட்டியில் கடலுார் மாவட்டம் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பயிலும் மாணவர் ஜெயரூபன், இந்திய கால் பந்தாட்ட அணிக்காக விளையாடினார்.
தமிழக பள்ளிகளில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவர் ஜெயரூபன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக விளையாடிய மாணவர் ஜெயரூபனை என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் பாராட்டினார். நெய்வேலி ஜவகர் பள்ளி கல்விக்கழகத்தின் செயலர் மூர்த்தி, ஜவகர் மெட்ரிக்பள்ளி முதல்வர் மருதாத்தாள் மற்றும் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ஜெபக்குமார் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X