சுருளியாறு மின் நிலையத்தில் முழு மின் உற்பத்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுருளியாறு மின் நிலையத்தில் முழு மின் உற்பத்தி

Added : நவ 30, 2019
Share

கம்பம் : சுருளியாறு நீர் மின்நிலையத்தில் 2 மாதங்களாக தொடர்ந்து 24 மணி நேரமும் முழு அளவிலான மின் உற்பத்தி நடைபெற்று வரு கிறது.

சுருளியாறு நீர் மின்நிலையம் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகா வாட் மின்உற்பத்தி செய்கிறது. இதற்கு இரவங்காலறு அணையிலிருந்துதண்ணீர் கொண்டுவரப்படுகிறது.பொதுவாக ஆண்டு முழுவதும் கோடைகாலங்களிலும் இங்கு மின்உற்பத்தி நடைபெறும். காலை, மாலையில் தேவைக்கு ஏற்ப மின்வாரியம் உற்பத்தி செய்யும். அதுவும் முழு அளவில் இருக்காது. ஆனால் கடந்த 2 மாதங்களாக முழு அளவான 35 மெகாவாட் மின் உற்பத்தி 24 மணி நேரமும் நடைபெறுகிறது. மேகமலையில் நல்ல மழை பெய்து வருவதால், அணைகளில் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளது. அந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டியகட்டாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே முழு வீச்சில் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது என மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X