நெடுஞ்சாலைத்துறை இடம் ஆக்கிரமிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலைத்துறை இடம் ஆக்கிரமிப்பு

Added : நவ 30, 2019

உத்தமபாளையம் : உத்தமபாளையத்திலிருந்து கோம்பை செல்லும் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கல்லுாரியிலிருந்து கோம்பை வரை, ரோட்டிற்கு வடக்கு பக்கம்உள்ள பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பெரும்பகுதி இடங்களில் கடைகளும், வீடுகளும் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.கனமழை பெய்யும் காலங்களில் ஓடையில் வரும் வெள்ளநீரால் பெரிய அளவில்பாதிப்பு ஏற்படும். ரோட்டில் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர், இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X