பொது செய்தி

தமிழ்நாடு

தலைக்கவசமே உயிர்கவசம்; மாவட்ட நீதிபதி அறிவுரை

Added : நவ 30, 2019
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார் : ''தலைக்கவசம் தான் நமது உயிர் கவசம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்,'' என,முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா கூறினார்.

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஸ்ரீவில்லி புத்துார் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலை பள்ளியில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நடந்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் அவர் பேசியதாவது: 70 ஆண்டுகளுக்கு முன்பேதற்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண சட்டத்தை இயற்றிய ஆசான்களை நாம் நினைவுகூர்ந்து அரசியல் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.

அநீதி நடைபெறும் போது அதை சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ தகவல் தெரிவித்து நாட்டுநல பணியில் ஈடுபடவேண்டும். டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டக் கூடாது. தலை கவசம் தான் நமது உயிர் கவசம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்,'' என்றார். தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். தலைமை குற்றவியல் நீதிபதி சரண், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர்.

மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை மாவட்ட நீதிபதி துவக்கி வைத்தார். ஸ்ரீவி., டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் பவுல் இயேசுதாஸ், பள்ளி செயலர் கிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், திருமலை, உதவி தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன், ஆசிரியர்கள் வருண், ராஜ்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X