தமிழ்நாடு

குமுளி கடைகளில் பாலிதீன் பைகள்... பறிமுதல்! வியாபாரிகளுக்கு கூடலூர் நகராட்சி எச்சரிக்கை

Added : நவ 30, 2019
Advertisement
குமுளி கடைகளில் பாலிதீன் பைகள்... பறிமுதல்! வியாபாரிகளுக்கு கூடலூர் நகராட்சி எச்சரிக்கை

கூடலுார் : குமுளியில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு கூடுதல் அபராதம் விதிப்பதுடன், கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என கூடலுார் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சபரிமலை சீசன் காரணமாக கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட குமுளியில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. இதனால் வியாபார நிறுவனங்களும் அதிகமாகியுள்ளன. அருகில் உள்ள கேரளாவில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலிதீன் பயன்பாடு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு அதை கடைகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில் குமுளியில் உள்ள தமிழகப்பகுதியில் பாலிதீன் பயன்பாடு அதிகமாக உள்ளது.

கூடலுார் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் குமுளியில் சோதனை மேற்கொண்டனர். கடைகளில் இருந்த அரசால் தடை விதிக்கப்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பாலிதீன் பைகள் பயன்படுத்துவோருக்கு கூடுதல் அபராதம் விதிப்பதுடன், கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

சபரிமலையில் பாலிதீன் பைகள் தடை உள்ளதால் குமுளி வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாலிதீன் பைகளை கொண்டு செல்லக்கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X