எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?வெங்காயத்தை எங்கே தேடுவேன்?சாம்பார் ருசிக்க உதவும் வெங்காயத்தை எங்கே தேடுவேன்?சாம்பார் ருசிக்க உதவும் வெங்காயத்தை எங்கே தேடுவேன்?அரசர் முதல் ஆண்டிக்கும் தேவைப்படும்வெங்காயத்தை எங்கே தேடுவேன்?கருப்பு மார்க்கெட்டில் பதுங்கிவிட்டாயோகடத்தல்காரன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?மும்பை மழையில் சிக்கி நாசமானாயோ?மும்பை மழையில் சிக்கி நாசமானாயோ?வண்டியில் போய் பதுங்கிக் கொண்டாயோவண்டியில் போய் பதுங்கிக் கொண்டாயோஅண்டின பேர்களை ரெண்டும் செய்யும் வெங்காயத்தைஎங்கே தேடுவேன் வெங்காயத்தை எங்கே தேடுவேன்?பூமிக்குள் புகுந்து விதைகளானாயோ?பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?பூமிக்குள் புகுந்து விதைகளானாயோ?பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?ஆசாமிகள் குடோன்களில் சரண்புகுந்தாயோ?ரகசிய கோலத்தில் உலாவுகின்றாயோ?எங்கே தேடுவேன்? வெங்காயத்தை எங்கே தேடுவேன்?திருடர்கள் கையில் சேர்ந்து விட்டாயோ?இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?இரக்கமுள்ளவரிடம் இருக்காத வெங்காயத்தைஎங்கே தேடுவேன் வெங்காயத்தை எங்கே தேடுவேன்!தேர்தலின் போது வெளி வருவாயோ?தேசமே தொழுதிட விலை குறைவாயோ?சுவர்களுக்குள் அமுக்கமாய் பதுங்கி விட்டாயோ?சுருட்டுவோர் கையில் விழுந்துவிட்டாயோஎங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?வெங்காயத்தை எங்கே தேடுவேன்?சாம்பார் ருசிக்க உதவும்வெங்காயமே வெங்காயமே வெங்காயமே!