பொது செய்தி

தமிழ்நாடு

மூணாறில் வணிக வளாக டெண்டர் ஒத்திவைப்பு

Added : நவ 30, 2019
Advertisement

மூணாறு : மூணாறில் பொதுப்பணித்துறையினருக்குச் சொந்தமான வணிக வளாகத்தின் டெண்டர் நடவடிக்கைகளை மறு தேதி குறிப்பிடாமல் அதிகாரிகள் ஒத்திவைத்தனர்.

மூணாறில் ஊராட்சி அலுவலகம் அருகே பொதுப்பணித்துறையினருக்குச் சொந்தமான ஓய்வு மாளிகை, தனியார் நிறுவனத்திற்கு 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 2002ல் வழங்கப்பட்டது. அந்நிறுவனம் ஓய்வு மாளிகையையொட்டி 24 அறைகளைக் கொண்ட வணிக வளாகத்தை கட்டி, அவற்றிற்கு முன் பணம் பெற்று வாடகைக்கு கொடுத்தனர்.ஆய்வுஅத்துறையைச் சார்ந்த அமைச்சர் சுதாகரன் ஓய்வு மாளியை கடந்தாண்டு ஆய்வுசெய்தபோது, பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தெரியவந்தது. எனவே தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் 2018 டிச. 27 ல் ரத்து செய்யப்பட்டது. அங்கு கடைகளை நடத்தி வந்தவர்களுக்கு நவ., 30( இன்று) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.இதனிடையே நேற்றுமுன்தினம் அறைகளை டெண்டர் விடும் அதிகாரிகளின் நடவடிக்கையை பொதுமக்கள், வர்த்தகர்கள் தடுத்து நிறுத்தினர்.நேற்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமா, உதவி செயற் பொறியாளர் ஜேக்கப்ஜார்ஜ் ஆகியோர் தலைமையில் டெண்டர் நடவடிக்கைகள் நடந்தபோதும், டெண்டர் எடுப்பதற்கு யாரும் வரவில்லை.பேச்சுவார்த்தைஇதனிடையே தேவிகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., மணி தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் வர்த்தக சங்கத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர். அதில் டெண்டர் தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறும்,தற்போது கடைகள் வைத்துள்ளோருக்கு பொதுப்பணித்துறையினரின் நிபந்தனைபடி கடைகளை ஒதுக்குமாறும் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், மறு தேதி குறிப்பிடாமல் டெண்டர் நடவடிக்கைகளை ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X