ஸ்ரீவில்லிபுத்தூர் : மல்லி சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லுாரி மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் இந்திய அரசியலமைப்பு தினவிழா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசுந்தரம் தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் திலீபன்ராஜா முன்னிலை வகித்தார். தன்னார்வலர் பொன்சுரேஷ் வரவேற்றார். ஸ்ரீவி., டி.எஸ்.பி. ,ராஜேந்திரன், நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், முதல்வர் மல்லப்பராஜா பேசினர். வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி அஸ்வினிபிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.* ஸ்ரீவில்லிபுத்தூர் படிக்காசு வைத்தான் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அரசியலமைப்பு தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை வகித்தார். ஆசிரிய ரோஸ்லீனா வரவேற்றார்.