பொது செய்தி

தமிழ்நாடு

ெஹல்மெட் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குதுங்க...!

Added : நவ 30, 2019
Advertisement

திருப்பூர்:உழவர் சந்தையில், ஹெல்மெட் அணிந்து திருடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, விவசாயிகள், வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், டூவீலர், ஆட்டோ, வேன்களில் வந்து காய்கறி வாங்கி செல்வோரை நோட்டமிட்டு அவர்கள், கவனம் சிதறிய நேரத்தில் மறைந்திருந்து காய்கறிகளை திருடுவதை ஒரு கும்பல் வழக்கமாக கொண்டுள்ளது.அதிகளவில் டூவீலர் நிறுத்தப்படும் ஸ்டாண்டில் ஒவ்வொரு வண்டி யில் இருந்து ஒரு கிலோ, அரைகிலோ என காய்கறிகள் மாயமாகிறது. வாங்கி வைக்கும் தக்காளியை ெஹல்மெட் அணிந்து வாகனங்களில் வரும் சிலர் அபேஸ் செய்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில்,'போதிய இடவசதி இல்லாததால், டூவீலர்கள் சந்தைக்கு வெளியே ரோட்டோரத்தில் இருபுறமும் நிறுத்தப்படுகிறது. இவற்றில் வைக்கப்படும் காய்களை ஒரு பெண், இரண்டு ஆண் மற்றும் சிலர் திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதிகாலை நேரம், விளக்கு வெளிச்சம் குறைவு என்பதால், இவர்களுக்கு வசதியாகி விடுகிறது. 'சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர்.வாலிபருக்கு தர்ம அடிவாடிக்கையாளர் ஒருவர் தக்காளி, வெங்காயம், காய்கறிகளை வாங்கி பையுடன் வாகனத்தில் வைத்திருந்தார். அவர் சந்தைக்கு உள்ளே சென்ற போது, இதனை கவனித்த வாலிபர், தான் வைத்திருந்த மற்றொரு பையில் வாகனத்தில் இருந்து காய்கறிகளை அள்ளி போட துவங்கினர். அங்கு வந்த அவர் கையும், களவுமாக பிடிக்க, மற்றவர்கள் வாலிபரை சரமாரியாக தாக்கினர். வலி பொறுக்க முடியாமல், வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X