பொது செய்தி

தமிழ்நாடு

காலாவதி மளிகை பொருட்கள் அமோக விற்பனை

Added : நவ 30, 2019
Advertisement

பல்லடம்:பல்லடத்தில், காலாவதியான மளிகை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.தொழில், வேலை வாய்ப்பு ரீதியாக வளர்ந்து வரும் பல்லடம் வட்டாரத்தில், 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சுற்றுவட்டார கிராமங்களுக்கு மையமாக இருப்பதால், கிராம மக்கள், தொழிலாளர்கள் பலர், தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க பல்லடம் வருகின்றனர்.இச்சூழலில், சில கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள், காலாவதியானவையாக இருப்பதால், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இன்றைய பரபரப்பான சூழலில், பொருட்கள் வாங்கி செல்லும் யாரும், காலாவதி தேதியையோ, பொருளின் தரத்தையோ பார்ப்பதில்லை.அது குறித்து விழிப்புணர்வும் மக்களிடம் இல்லை என்பதால், காலாவதி தேதி முடிந்த பின்னும், அத்தியாவசிய பொருட்கள் பலர், இருப்பு வைத்து, விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர். அதனால், மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, உணவு பாதுகாப்பு துறையினர், பாரபட்சமின்றி ஆய்வு மேற்கொண்டு, காலாவதி பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். மக்களிடம் அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X