பொது செய்தி

தமிழ்நாடு

மொட்டப்பாறையில் மழையால் கசியும் நீர்

Added : நவ 30, 2019
Advertisement

ஆண்டிபட்டி : தெப்பம்பட்டி மொட்டப்பாறையில் வடிந்து வரும் நீர் ஊரணியில் தேங்குவதால் நிலத்தடிநீர் ஆதாரம் மேம்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது தெப்பம்பட்டி மொட்டப்பாறை. மழைக்காலத்தில் உச்சிப்பகுதியில் பெய்யும் மழைநீர் சில நாட்கள் வரை கசிந்து வருவது பலரும் ரசிக்கும்படி உள்ளது. ஆண்டிபட்டியில் இருந்து வேலப்பர் கோயில் செல்லும் பக்தர்கள் இதனை பார்க்க தவறுவதில்லை.மரங்கள், செடி,கொடிகள் நிறைந்த வனப்பகுதி சிற்றோடை வழியாக வரும் நீர் இப்பகுதி ஊரணியில் தேங்குகிறது. இதனால் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படுகிறது. ஆண்டு முழுவதும் விவசாயம் தொடர்கிறது. நீர் வரத்து ஓடை ஊரணியை துார்வாரினால் அதிகம் நீர் தேங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். ---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X