பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் இல்லத்துக்கு அனுமதி:

Added : நவ 30, 2019
Advertisement

திருப்பூர்:ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு அனுமதி பெறும் அவகாசத்தை, நீட்டித்து வழங்க வேண்டுமென, தொண்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.சமூகநலத்துறை சார்பில், மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன், முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.முதியோர் இல்லம், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள் அமைக்க, தனியார் தொண்டு நிறுவனங்கள், இன்று மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.மாநில அரசின், ஐந்து பங்கு உதவியுடன், ஒரு பங்கு பங்களிப்பு செலுத்தி, ஆதரவற்ற முதியோர், 40 பேர் தங்கும் இல்லங்கள் அமைக்கலாம். மாநில அரசின், 75 சதவீத உதவியுடன், 25 முதியோர் மற்றும் 25 குழந்தைகள் தங்கும் ஒருங்கிணைந்த வளாகங்கள் அமைக்கலாம்.மத்திய அரசின், 90 சதவீத உதவியுடன், குறைந்த பட்சம், 25முதியோர்கள் தங்கும் மூத்த குடிமக்களுக்கான முதியோர் இல்லங்களை அமைக்கலாம். மத்திய அரசு, 60 சதவீதம், மாநில அரசின் 40 சதவீத பங்களிப்புடன், 30 பெண்கள் தங்கும் 'ஸ்வதார்' இல்லங்கள் அமைக்கலாம்.வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறையின் தடையின்மை சான்று மற்றும் அறக்கட்டளை அல்லது நிறுவன சட்டத்தில் பதிவு செய்த சான்று, இளைஞர் நீதிச்சட்ட சான்றுகளுடன், நாளை, மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.புதிய இல்லங்கள் துவங்க, ஒரே நாளில், இவ்வளவு சான்றிதழ் பெற்று, விண்ணப்பம் செய்வது என்பது இயலாத காரியம். தற்போதுள்ள இல்லங்களை புதுப்பிக்கவும், ஒருநாள் அவகாசம் போதாது. எனவே, மாவட்ட நிர்வாகம், புதிய இல்லங்கள் துவங்க, கூடுதல் அவகாசம் பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X