ராதாபுரம் மறு ஓட்டு எண்ணிக்கை வழக்கு டிச., 11ல் இறுதி விசாரணை

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (4)
Advertisement
ராதாபுரம் மறு ஓட்டு எண்ணிக்கை வழக்கு  டிச., 11ல் இறுதி விசாரணை

புதுடில்லி :ராதாபுரம் சட்டசபை தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கில், 'டிசம்பர், 11ல் இறுதி விசாரணை நடைபெறும்' என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, 2016ல் நடந்த தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இன்பதுரை, தி.மு.க., வேட்பாளர் அப்பாவுவை விட, 49 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார்.இந்த வெற்றியை எதிர்த்து, தி.மு.க., வேட்பாளர் அப்பாவு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 203 தபால் ஓட்டுகள் எண்ணப்படவில்லை என்றும், ஓட்டு எண்ணிக்கையின் போது, சில சுற்றுகளில் முறைகேடு நடந்ததாகவும் கூறப்பட்டது.




இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 19, 20 மற்றும் 21வது சுற்றுகளில் எண்ணப்பட்ட ஓட்டுகள் மற்றும் தபால் ஓட்டுகளை, மீண்டும் எண்ண உத்தரவிட்டது.இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே, மறு ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்தது.இந்நிலையில், 'மறு ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இன்பதுரை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.மறு ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதன் முடிவுகளை வெளியிட, இடைக்கால தடை விதித்தது.இந்நிலையில், 'இந்த வழக்கின் இறுதி விசாரணை, அடுத்த மாதம், 11ல் நடைபெறும்' என, உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-நவ-201914:34:19 IST Report Abuse
Balamurugan B I think they will just a month before next assembly election
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-நவ-201914:25:59 IST Report Abuse
Thiagarajan Kodandaraman கொஞ்ச நஞ்ச முடி இருக்கும்போதே ரிசல்ட்டை சொல்லுங்க சார் . பாவம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-நவ-201913:54:23 IST Report Abuse
தமிழ்வேல் எந்தக் காரணத்திற்காக முடிவை அறிவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X