பொது செய்தி

தமிழ்நாடு

உழவருக்கு பெருமை சேர்க்க பள்ளியில் சாதனை முயற்சி

Added : நவ 30, 2019
Advertisement

அவிநாசி:உழவருக்கு கவுரவிக்கும் வகையில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி, அவிநாசியில் நேற்றுதுவங்கியது.மாணவ, மாணவியரின் தனித்திறமையை வெளிக்கொணரும் நோக்கில், அவிநாசி, முத்துசெட்டிபாளையம் புனித தோமையார் தேவாலயம் மற்றும் ராபா மீடியா இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி, நேற்று காலை, அவிநாசி புனித தோமையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.ராபா மீடியா நிறுவனர் ராமானுஜம் பிரசன்னா, புனித தோமையார் தேவாலய குரு கென்னடி ஆகியோர், துவக்கி வைத்தனர். பள்ளி தாளாளர் சோபியா, முதல்வர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.இதில், நடனம், பாட்டு, இசை, இசைக்கருவி மீட்டுவது, மேஜிக் ேஷா, பலகுரல் பேச்சு, யோகா, கதை சொல்வது, ஓவியம் வரைவது உட்பட, 26 வகை பிரிவில், மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்துகின்றனர். இரண்டு நாட்கள், பல மணி நேரம் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.'இந்நிகழ்ச்சி, சாதனை புத்தகங்களில் பதிவு செய்ய முயற்சி எடுக்கப்படும்,' என, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X