பொது செய்தி

தமிழ்நாடு

வாசிப்பை ஊக்குவிக்கும்

Added : நவ 30, 2019
Advertisement

விருதுநகர்: புத்தகங்கள் மனித சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அறிவை வளர்த்து மனிதனை அடுத்த நிலைக்கு கொண்டு சென்ற பெருமை புத்தகங்களை தான் சேரும்.மனித நாகரிகம் தோன்றிய பின் பாறையில் வரைவதும், ஓலையில் எழுதுவதும் படைப்பின் துவக்க கட்டமாக இருந்தது. பிற்காலத்தில் பாறை ஓவியங்கள், ஓலைச்சுவடிகள் வைத்தே நம்மால் வரலாற்றை உணர முடிந்தது. ஓலைச்சுவடிகள் பிற்காலத்தில் புத்தகங்களாய் மாறின. இதில் தமிழ் இலக்கியங்களுக்கு பெரும் பங்குண்டு. இவை அனைத்தையும் பொக்கிஷங்களாய் பாதுகாப்பது நுாலகங்கள் தான். ஒரு நுாலகம் திறக்கப்படும் போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்ற மேல்நாட்டு அறிஞர்கள் கூறுகின்றனர். விருதுநகரின் அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் நுாலகங்கள் உள்ளது. பாடசாலை தாண்டியும் மாணவர்கள் செல்ல வேண்டும் என்பதற்காகவே நுாலகங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் ஈடுபட்டு வருகின்றன. விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மிகவும் பழமையான நுாலகம் உள்ளது. இங்கு லட்சக் கணக்கான புத்தகங்கள் உள்ளன.விருதுநகர் வன்னியபெருமாள் கல்லுாரியின் நுாலகத்தில் வாசிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக ஆசிரியர் கண்டுபிடிப்பு, புத்தக பெயர் கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கே.வி.எஸ்., மேல்நிலை பள்ளி, ஷத்திரியா பெண்கள் மேல்நிலை பள்ளி, தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நுாலகம் ஒரு கட்டாய பாடவேளையாகவே உள்ளது. பாட புத்தகம் மட்டுமே அனைத்து குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்காது. சிறுகதைகளும், வரலாற்று இலக்கியங்களும், நல்ல புத்தகங்களுமே நல்ல எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும், பேச்சாளர்களையும் உருவாக்கும்.நல்ல புத்தகங்கள் நல்ல கனவுகளை வளர்க்கும். நல்ல கனவுகள் நல்ல எண்ணங்களை உருவாக்கும். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும். புத்தகங்கள் நம் பொக்கிஷங்கள். நாளிதழ்கள் நம் நண்பர்கள் என்பதை நம் குழந்தைகளுக்கு கூறி வளர்ப்போம். விருதுநகர் பள்ளிகள் தற்போது படிப்புடன் நுாலகம் வாயிலாக அறிவோடு மனிதத்தையும் விதைத்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வாசிப்பால் வரும் விருது எங்கள் கல்லுாரியில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இணைய வழி 'கேட்டலாக்' வசதி இருப்பதால் புத்தகங்களை எளிதில் பெற முடிகிறது. நுாலகத்தை அறிந்து கொள் எனும் பெயரில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதிகளவில் நுாலகத்தை பயன்படுத்தும் மாணவிகளுக்கு சிறந்த நுாலக பயன்பாட்டாளர் விருது வழங்கப்படுகிறது. வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.-- காமாட்சி காயத்ரி, 3ம் ஆண்டு, வன்னியபெருமாள் கல்லுாரி.இலவசமாக புத்தகம் வழங்குகிறோம்எங்கள் பள்ளி நுாலகம் மிகவும் அற்புதமாக இருக்கும். 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 'மின்னலை சிறைபிடித்த பெஞ்சமின் பிராங்களின்' என்ற அறிவியல் கண்டுபிடிப்புகளின் விளக்க கதை அடங்கிய புத்தகங்களை விரும்பி படிக்கிறேன். இங்கு அனைத்து நாளிதழ்களும் கிடைப்பதால் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள முடிகிறது. பிறந்த நாள் கொண்டாடும் மாணவர் நுாலகத்திற்கு ஒரு புத்தகம் இலவசமாக கொடுக்கிறோம்.- குருபிரசாத், 8ம் வகுப்பு , கே.வி.எஸ்., மேல்நிலை பள்ளி,விருதுநகர்.போட்டிகளுக்கு உதவுகிறதுமாவட்ட அளவில் நடக்கும் கவிதை, கட்டுரை, பேச்சு உள்ளிட்ட கலை போட்டிகளில் பங்கேற்க எங்கள் பள்ளி நுாலகம் மிகவும் உதவியாக உள்ளது. ஒரு புத்தகத்தை வாசித்து அதை பற்றிய கருத்துக்களை ஒவ்வொரு வாரமும் 'அசெம்ப்ளியில்' கூறுவோம். இதன் மூலம் பிற மாணவர்களுக்கும் புத்தகம் வாசிக்க ஈர்ப்பு ஏற்படுகிறது.- பரமேஸ்வரி, 10ம் வகுப்பு, தங்கம்மாள் பெரியசாமி பெண்கள் மேல்நிலை பள்ளி. விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X