பொது செய்தி

தமிழ்நாடு

தபால் குறைதீர்ப்பு கூட்டம் டிச., 10ல் நடக்கிறது

Added : நவ 30, 2019
Share
Advertisement
திருப்பூர்:மண்டல அளவிலான தபால் குறைதீர்ப்பு கூட்டம், கோவை, ஆர்.எஸ்.புரம், மேற்கு மண்டல தலைமை தபால் அலுவலகத்தில் டிச.,10ல் நடக்கிறது.தபால்சேவை சம்மந்தமான குறைகளை வாடிக்கையாளர்கள், தலைமை தபால் அதிகாரியிடம் நேரடியாக தெரிவிக்கும் வகையில், குறைதீர்ப்பு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும்

திருப்பூர்:மண்டல அளவிலான தபால் குறைதீர்ப்பு கூட்டம், கோவை, ஆர்.எஸ்.புரம், மேற்கு மண்டல தலைமை தபால் அலுவலகத்தில் டிச.,10ல் நடக்கிறது.தபால்சேவை சம்மந்தமான குறைகளை வாடிக்கையாளர்கள், தலைமை தபால் அதிகாரியிடம் நேரடியாக தெரிவிக்கும் வகையில், குறைதீர்ப்பு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்கலாம்.விருப்பமுள்ளோர் தங்கள் புகார்களை, 'தபால்தலைவர், மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம், கோவை- 2' எனும் முகவரிக்கு வரும் டிச., 5ம் தேதிக்குள் தபாலில், எழுதி அனுப்பலாம். புகார்தாரர் தங்கள் வீட்டு முகவரி, தேதி உள்ளிட்ட விபரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். சிறு சேமிப்பு, தபால் காப்பீடு சம்மந்தமான புகார் எனில், கணக்கு எண், பெயர், தபால் நிலையம் ஆகிய விபரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். தேவைப்பட்டால் தபால் சேவை குறித்த உங்கள் யோசனைகளையும் தெரிவிக்கலாம் என, திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X