பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை பாக்கி; கடைகளுக்கு 'சீல்': மாநகராட்சியினர் அதிரடி

Added : நவ 30, 2019
Advertisement

திருப்பூர்:நீண்ட கால வாடகை நிலுவை வைத்துள்ள 15 கடைகளை மாநகராட்சி நிர்வாகம் நேற்று, பூட்டி சீல் வைத்தது.திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், குமரன் வணிக வளாகம், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன. இவற்றில் உள்ள ஏராளமான கடைகள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உரிய வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தன.அவ்வகையில் வாடகை நிலுவை உள்ள ஏராளமான கடைகளில் கடந்த மாதம் மாநகராட்சி வருவாய் பிரிவினர் சென்று ஆய்வு நடத்தினர். குறைந்த கால வாடகை நிலுவையில் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஓராண்டுக்கும் மேல் பல மாத வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டது. நிலுவை வாடகையை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.அவ்வகையில், எச் சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தாத கடைகள் குறித்து நேற்று மாநகராட்சி வருவாய் பிரிவு உதவி கமிஷனர் தங்கவேல் ராஜன் தலைமையில் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வின் போது, ஓராண்டு முதல் ஒன்றரையாண்டு வரையில் வாடகை பாக்கி வைத்திருந்த 15 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மூன்று; புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் எட்டு; தினசரி மார்க்கெட் மற்றும் வாரச் சந்தை வளாகத்தில் தலா இரு கடைகள் என மொத்தம் 15 கடைகள் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X