சென்னை: நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில், 'சில்க் இந்தியா -- 2019' கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் அனுமதி பெற்ற, தன்னார்வ அமைப்பு சார்பில், பல மாநிலங்களில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.இதில், தேசிய அளவிலான நெசவாளர்கள், கைவினைஞர்களின் உற்பத்தியை நேரடியாக சந்தைப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில், சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சி நடத்தப்படுகிறது.இதில், பல்வேறு மாநில பட்டு நெசவாளர்கள், கைத்தறி அமைப்புகள், பட்டு கூட்டுறவு சங்கங்கள் தங்கள் உற்பத்தியை காட்சிப்படுத்தி, விற்பனை செய்கின்றன.கைமுறை பிளாக் அச்சு சேலைகள், டிசைனர் டிரஸ் வகைகள், பாந்தினி சேலைகள், மட்கா, அசாம் மூகா துணி வகைகள், அபூர்வா பட்டு, கிச்சா; பொட்டிக், காந்தா,சர்தோசி, லக்னோ சிக்கன் வேலைப்பாடு சேலைகள் உள்ளிட்டவை, கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.டிச., 8ம் தேதி வரை நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:30 முதல், இரவு, 8:30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.