பொது செய்தி

தமிழ்நாடு

பளபளக்குது பழைய பாத்திரங்கள்

Added : நவ 30, 2019
Advertisement

சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.நாயுடு நகரில் வீட்டில் வைத்து பழைய பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு பாலீஸ் போட்டுத்தரப்படுகிறது.

எவர் சில்வர் பாத்திரங்கள் வருகையால் பழைய பித்தளை, செம்பு, வெங்கலத்தால் ஆன பாத்திரங்கள் பரண் மேல் படுத்து உறங்க துவங்கி விட்டன. வீட்டில் உள்ள செம்பு, பித்தளை பாத்திரங்களின் அதிக எடையால் துாக்கி கொண்டு செல்வதும் , தண்ணீர் பிடித்து வைப்பதும், கையாள்வதும்காலப்போக்கில் சிரமமாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் குடங்கள், குவளைகள் வரத் தொடங்கிய பின் பழைய பாத்திரங்களை யாரும் திரும்பி கூட பார்ப்பது இல்லை. இருந்த போதும் கல்யாணம் ,சடங்கு, காதுகுத்து போன்ற விசேஷங்களின்இது போன்ற பித்தளை, செம்பு பாத்திரங்கள் சீராக வைப்பது கவுரவமாக இன்றளவும் உள்ளது.

பாத்திரத்தை புழங்காமல் வீட்டின் பரணியில் போட்டு விட்டால் அதில் துாசி பரவி பளபளப்பு தேய்ந்து போய் விடும். பல வீடுகளில் கரிசட்டி போல் காணப்படும் பித்தளை பாத்திரங்களான அண்டா, குடம், விளக்குபோன்றவற்றை சுத்தமாக கிளினிங் செய்து புது பாத்திரமாக்கி தருகிறார் சாத்துார்எஸ்.ஆர்.நாயுடு நகரை சேர்ந்த துரைராஜ் 55. கடந்த 35 ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வரும் அவர் கூறியதாவது: சித்திரை , வைகாசி, ஆனி மாதங்களில் தான் அதிகளவில் திருமணம், சடங்கு, புதுமனைபுகுதல் வைபவங்கள் நடைபெறும். அந்த நேரத்தில் தான் அதிகளவில் பித்தளை பாத்திரங்களை பாலீஸ் செய்ய வரும்.

வளர்பிறை முகூர்த்தங்கள் என்றால் பாலீஷ் போட அதிகம் பேர் வருவார்கள். பித்தளை பாத்திரங்களை பாலீஸ் செய்து தர முன்பு அதிக பட்டறைகள் இருந்தன. தொழில் நலிவடைந்ததால் தற்போது ஒரு சிலர் தான் இத் தொழிலை செய்கின்றனர். பலர் மாற்று தொழிலுக்கும் சென்று விட்டனர், என்றார். உங்கள் வீட்டு பாத்திரங்கள் பளபளக்க 99651 12162ல் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X