பொது செய்தி

தமிழ்நாடு

பறக்கும் பஸ்களால், 'தெறிக்கும்' பாதசாரிகள்!

Added : நவ 30, 2019
Advertisement

பல்லடம்:பல்லடம் என்.எச்., ரோட்டில், பஸ்களி டையே ஏற்பட்டு வரும் நீயா நானா போட்டி காரணமாக, பாதசாரிகள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து அதிகம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால், விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.பல்லடத்தில்,என்.எச்., ரோட்டை கடப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான், வாகனங்கள் அன்றாடம் பயணித்து வருகின்றன. விபத்துகளை தடுக்க, நகர பகுதிகளில், 30 கி.மீ., வேகத்துக்கும் குறைவாகவே வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.ஆனால், பெரும்பாலான வாகனங்கள் விதி முறைகளை பின்பற்றுவது கிடையாது. போக்குவரத்து நிறைந்த என்.எச்., ரோட்டில், நிமிடத்துக்கு நிமிடம் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் வாகனங்களால், பாதசாரிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக, பஸ்களிடையே அன்றாடம் ஏற்படும் நீயா, நானா போட்டியை கண்டு, பாதசாரிகள் தெறித்து ஓடுகின்றனர். அவ்வாறு ஏற்படும் போட்டிகளால், பஸ்கள், ரோட்டை விட்டு நடைபாதையில் செல்கின்றன. அதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள், மற்றும் ரோட்டோரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு, விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.எனவே, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, விதிமுறை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X