பெண் டாக்டர் கொலை: 4 பேர் கைது: நாடு முழுவதும் கொந்தளிப்பு

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (117)
Advertisement
பெண் டாக்டர் கொலை: 4 பேர் கைது: நாடு முழுவதும் கொந்தளிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் கால்நடை டாக்டரை கொலை செய்து, உடலை எரித்துவிட்டு தப்பியோடிய சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானாவில் ரெங்காரெட்டி மாவட்டம், கொலுரு கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா,24. கால்நடை மருத்துவர். கடந்த நவ. 27-ம் தேதி காலை மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
பின்னர் ஷாத்நகரில் உள்ள சதன்பளி பாலத்தில் பிரியங்கா, உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பிரியங்கா நான்கு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் 25 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரியங்கா கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
03-டிச-201920:22:35 IST Report Abuse
mohan கலியுகம் வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறது.. அதற்கு ஆதிக்க சக்திகள் ஆதரவு... ஒன்றும் செய்ய முடியாது.. மக்களை காப்பாற்ற மக்கள் மாலை நேரத்தில் நடமாட்டத்தை குறைத்து கொள்ளலாம்...இல்லாவிட்டால், ஆறுமணிக்கு மேல், வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்... பகல் நேரத்தில் பெண்ககள் எங்கு சென்றாலும், தனக்கு தெரிந்த பெண்கள் அல்லது வீட்டு நபர்களுடன் வெளியில் செல்லலாம்...வேறு என்ன செய்ய முடியும். மீடியாவும், நவீனமும், எந்த அளவுக்கு வளர்கிறதோ, அந்த அளவுக்கு, அரசு, கல்வியிலும், சட்ட திட்டத்திலும், நவீன படுத்துவதில்லை...சவுதி அரேபியா போல், குற்றவாளிகளை, லட்சம் பேர் முன்னிலையில், மரண தண்டனை கொடுக்க வேண்டும். அதை நாடு முழுதும், நேரடி ஒளிபரப்பு செய்தல், இதனுடைய தீவிரத்தை உணர்வர்....அல்லது நாடு முழுவதும் மாதர் சங்கங்கள் ஏதாவது ஒரு வழியில், எல்லாரையும், கவனத்தில் ஈர்க்கும் அளவுக்கு போராட்டம் மட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...எவ்வளவு கொடூரமான விஷயம், நாட்டின், அமைதி திருடர்கள், அமைதியாக திருடி கொண்டு உள்ளனர்.. அது தெரியாமல், மக்கள் ஒரு பக்கம், இப்படி சாகின்றனர்.. இந்த அமைதி திருடர்களை, கண்டிக்க, எந்த ஒரு சட்டமும் இல்லை.. என்ன செய்ய.. இவர்களை பார்த்து நாட்டின் எல்லா துறையினரும் பய படுகின்றனர்... அதனால் தான் இவ்வளவு கொடூரம்...மக்கள் மாலை நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel
VSK - CARY,யூ.எஸ்.ஏ
02-டிச-201917:50:56 IST Report Abuse
VSK கடுமையான சட்டம் இதற்கென எழுதாத இந்திய அரசியல்வியாதிகள் ஒழியட்டும்
Rate this:
Share this comment
Cancel
mei - Colombo,இலங்கை
02-டிச-201908:20:06 IST Report Abuse
mei criminals இந்த விஷயத்தில மட்டும் மத ஒற்றுமை காட்டுறாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X