பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்மிக அறிவுடன் குழந்தை வளரணும்'

Added : நவ 30, 2019
Advertisement
 'ஆன்மிக அறிவுடன் குழந்தை வளரணும்'

திருப்பூர்:''இன்றைய காலகட்டத்தில், குழந்தைகள் ஆன்மிக அறிவுடன் வளர்க்கப்பட வேண்டும்,'' என, புலவர் ராமலிங்கம் பேசினார்.திருப்பூர் காலேஜ்ரோடு ஸ்ரீஐயப்பன் கோவிலில், 60ம் ஆண்டு மண்டல பூஜை நடந்து வருகிறது. தினமும் மாலை, 6:30 மணிக்கு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நேற்று முன்தினம், 'ஆன்மிக பண்புகளை அதிகம் வளர்ப்பது குடும்பமா? கோவிலா?' என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது.அதில், நடுவராக இருந்த புலவர் ராமலிங்கம் பேசியதாவது:மக்கள், உறவினருடன் மகிழ்ந்திருக்க திருவிழாக்கள் நடத்தப்பட்டன. தற்போது, இயந்திரமயமாக குழந்தைகளை வளர்க்கின்றனர்; இதயமுள்ள மனிதர்களாக வளர்க்க வேண்டும். மனித நேய பண்புகளை வளர்ப்பது கோவில்களே.ஒழுக்க மேண்மையுடன் வாழ்வதே தேசத்தின் அடிநாதமாக விளங்குகிறது.இன்றைய காலகட்டத்தில், பிள்ளைகள், ஆன்மிக அறிவுடன் வளர்க்கப்பட வேண்டும். தற்போதைய குழந்தைகளின் திறமைக்கு பஞ்சமில்லை. குழந்தைகள் முன், கணவன்-மனைவியாக இருக்கக்கூடாது; தாய் -தந்தையாக இருக்க வேண்டும்.சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், அரண்மனைகளுக்கு ஆசைப்படவில்லை; ஆலயங்கள் அமைக்கவே விரும்பினர். தாயும், தந்தையும் கண் கண்ட தெய்வமாக இருந்தாலும், ஆன்மிக பண்புகளை வளர்ப்பது கோவில்களேஇவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X