பொது செய்தி

தமிழ்நாடு

கிணறு பயம், இனி இல்லை!

Added : நவ 30, 2019
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவில், டி.ஆர்., நகர் அரசு நடுநிலைப்பள்ளி அருகே, வாரச்சந்தையின், நுழைவு வாயிலில் கடந்த 35 ஆண் டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட கிணறு உள்ளது.தண்ணீர் வற்றிய நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றை மூடிவிட்டனர். கிணற்றுப்பகுதி வாரச்சந்தையின் நுழைவு வாயிலாக இருந்தது.தற்போது இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமானதால் கிணற்றில் தண்ணீர் ஊறியதால், மூடப்பட்ட
 கிணறு பயம், இனி இல்லை!

வெள்ளகோவில்:வெள்ளகோவில், டி.ஆர்., நகர் அரசு நடுநிலைப்பள்ளி அருகே, வாரச்சந்தையின், நுழைவு வாயிலில் கடந்த 35 ஆண் டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட கிணறு உள்ளது.தண்ணீர் வற்றிய நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றை மூடிவிட்டனர். கிணற்றுப்பகுதி வாரச்சந்தையின் நுழைவு வாயிலாக இருந்தது.தற்போது இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமானதால் கிணற்றில் தண்ணீர் ஊறியதால், மூடப்பட்ட மண் குவியல் உள்வாங்கியது. நகராட்சி நிர்வாகம் உடனே ஜே.சி.பி., வைத்து மண்ணை கொட்டி மூடினர்.தற்போது, 28 அடி நீளத்தில் 22 அடி அகலத்தில் 7 அடி உயரத்திற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு அதன்மீது கம்பி கட்டப்பட்டு கான்கிரீட் மூடி அமைக்கும் பணி 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் நடக்கிறது. இதனால் இனிமேல் இப்பாதையில் வாகனங்கள் பயமின்றி சந்தைக்குள் காய்கறிகளை ஏற்றி செல்லலாம் எனத் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X