பொது செய்தி

தமிழ்நாடு

தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு

Added : நவ 30, 2019
Advertisement

பல்லடம்:தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டுமென, தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்திலுள்ள வணிக நிறுவனங்களில், கட்டாயம் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால், அவற்றை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவதில்லை. பல்லடத்திலுள்ள வணிக நிறுவனங்கள் பலவற்றில், பெயர் பலகைகள், ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டுள்ளன. இது குறித்து, பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பெயர் பலகையில், 5:3:2 என்ற அளவில், தமிழ், ஆங்கிலம், மற்றும் பிற மொழியில், எழுதலாம். அந்தந்த மாநில மொழிக்கு முதன்மைத்துவமும், அதை தொடர்ந்து பிற மொழிகளுக்கு முக்கியத்துவமும் தர வேண்டும் என்பதால், தமிழர்கள் வாழும் தமிழகத்தில், தமிழ் மொழியில், பெயர் பலகைகளை அமைக்க வேண்டும் என, கூட்டமைப்பின் சார்பில், விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X