லேப்-டாப் கிடைத்தது மாணவியர் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'லேப்-டாப்' கிடைத்தது மாணவியர் மகிழ்ச்சி

Added : நவ 30, 2019

திருப்பூர்:கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவியருக்கு இலவச 'லேப்-டாப்' ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வழங்கப்பட்டது.கடந்த 2017--18, 2018--19-ம் ஆண்டுகளில் பிளஸ் 2 படித்தவர்களுக்கு 'லேப்-டாப்' வழங்கப்படவில்லை. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்ப, விடுபட்ட மாணவருக்கும் 'லேப்-டாப்', இரு மாதங்களுக்கு முன்பாகவே திருப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வந்து சேர்ந்தன.நேற்று ஜெய்வாபாய் பள்ளியில், கடந்தாண்டு பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவிகளுக்கும் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா 'லேப்-டாப்' வழங்கினார்.பல்லடம்பல்லடத்தில், 2018-19ம் கல்வி ஆண்டில் படித்த பிளஸ் 2 மாணவர்கள், 'லேப்-டாப்' பெற்றுக் கொள்ளலாம் என, அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, இலவச 'லேப்-டாப்' வழங்கும் திட்டம், தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, 2018 - 19ம் கல்வி ஆண்டில், படித்த மாணவ மாணவியருக்கு, 'லேப்-டாப்' வழங்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியர் நாட்ராயன் கூறுகையில், '2018-19ம் கல்வி ஆண்டில், அரசு ஆண்கள் பள்ளியில், 132 பேர் பிளஸ் 2 படித்துள்ளனர். அவர்களுக்கான இலவச 'லேப்-டாப்' வினியோகிக்கப்பட்டு வருகிறது.இதுவரை, 48 பேர் 'லேப்-டாப்' பெற்றுள்ளனர். விடுபட்ட மாணவர்கள், அரசு பள்ளிக்கு நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளலாம்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X