பொது செய்தி

தமிழ்நாடு

119 கடைகள் ஏலம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
சென்னை: சி.எம்.டி.ஏ.,வின் விற்பனை மற்றும் வாடகை அடிப்படையில், 119 கடைகளை பெறுவதற்கு, விண்ணப்ப படிவங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.சி.எம்.டி.ஏ., வெளியிட்ட அறிவிப்பு:சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டில், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி, புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள் உள்ளன. இதில், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், 40 கடைகள் விற்பனைக்கு

சென்னை: சி.எம்.டி.ஏ.,வின் விற்பனை மற்றும் வாடகை அடிப்படையில், 119 கடைகளை பெறுவதற்கு, விண்ணப்ப படிவங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.சி.எம்.டி.ஏ., வெளியிட்ட அறிவிப்பு:சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டில், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி, புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள் உள்ளன. இதில், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், 40 கடைகள் விற்பனைக்கு உள்ளன. சி.எம்.டி.ஏ., அலுவலக வளாகம், கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகம், மாதவரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில், 79 கடைகள், வாடகை அடிப்படையில் வழங்கப்பட உள்ளன. மொத்தம், 119 கடைகளுக்கான புதிய விலை, வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது ஏல முறையில், இதற்கான ஒதுக்கீடுகள் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை, ஜன., 6 வரை சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், கண்காணிப்பு பொறியாளர் அறையில் உள்ள பெட்டியில், ஜன., 8க்குள் செலுத்த வேண்டும்.இணையதளத்தில், உரிய அடிப்படை தகவல்கள் அளித்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே, பரிசீலனைக்கு ஏற்கப்படும். நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.இவ்வாறு, சி.எம்.டி.ஏ., அறிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X