பொது செய்தி

தமிழ்நாடு

இவன் தந்திரன் நிகழ்ச்சி: கலைஞர் டி.வி.,

Added : நவ 30, 2019
Advertisement

இவன் தந்திரன்'கலைஞர் செய்திகள் டிவி'யில், திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு, 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும், இவன் தந்திரன் நிகழ்ச்சியில், அரசியல் நையாண்டியும், அன்றைய அரசியல் நிகழ்வுகள் மற்றும் அன்று அதிகம் பேசப்பட்ட மீம்ஸ்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.இதில் கலாய் கிங்ஸ், நச்சுனு ஒரு இன்டர்வியூ போன்ற பகுதிகள் இடம் பெறுகின்றன. வரவணை செந்தில், மஞ்ச நோட்டீஸ் ஜென்சன் திவாகர், முரசொலி குழுவினர் அரசியல் தலைவர்களை போல வேடமிட்டு, கமென்ட் அடிப்பது, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. 30 நிமிடத்தில், அன்றைய அரசியல் நிகழ்வுகளை நச்செனகோர்ப்பது, இந்நிகழ்ச்சியின் சிறப்பு.கமலின் உங்கள் நான்நடிகர் கமலின், 60 ஆண்டு திரையுலக பயணத்தை முன்னிட்டு, இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இன்னிசை கச்சேரியோடு, பாராட்டு விழா சென்னையில் நடந்தது.இந்நிகழ்ச்சியை, இன்று மற்றும் டிச., 1ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, 'விஜய் டிவி'யில் ஒளிப்பரப்ப உள்ளனர். இதில், ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், விஜய் சேதுபதி, வடிவேலு உள்ளிட்ட பலர் பேசிய பேச்சுகள், ஏற்கனவே வைரலாகி உள்ள நிலையில், இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X