பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு காய்கறி கடைகளில் வெங்காயம் விற்கப்படுமா!

Added : நவ 30, 2019
Advertisement

சென்னை: தொடர்ந்து விலை உயர்ந்து வரும் நிலையில், கூட்டுறவு காய்கறி கடைகளில், கூடுதலாக வெங்காயம் விற்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்கள், பண்ணை பசுமை நுகர்வோர் என்ற பெயரில், காய்கறி கடைகளை நடத்தி வருகின்றன. அவற்றில், வெளிச்சந்தையை விட, சற்று குறைந்த விலைக்கு, வெங்காயம், தக்காளி, உருளை உள்ளிட்ட முக்கிய காய்கறிகள் விற்கப்படுகின்றன. வரத்து குறைவால், தற்போது, வெளிச்சந்தையில், வெங்காயம் விலை, ரகம் வாரியாக, கிலோ, 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இம்மாதம், 8ம் தேதி முதல், சென்னையில் உள்ள, 43 பண்ணை பசுமை கடைகளில், மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும், ஆந்திர வெங்காயம், கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இது, மொத்த விலை சந்தையில், 38 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, பண்ணை பசுமை கடைகளுக்கு, தினமும், 2,500 கிலோ அனுப்பப்படுகிறது. அந்த கடைகளில், நேற்று வரை, 45 ஆயிரம் கிலோ வெங்காயம் விற்கப்பட்டுள்ளது. இது குறித்து, வாடிக்கையாளர்கள் கூறியதாவது:சமையலுக்கு, வெங்காயம் முக்கியம். அதன் விலை உயர்ந்து வரும் நிலையில், அதை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு கடைகளில், குறைந்த விலைக்கு வெங்காயம் விற்கப்பட்டாலும், விரைவில் தீர்ந்து விடுகிறது. இதனால், அனைவருக்கும் வெங்காயம் கிடைப்பதில்லை.கூட்டுறவு கடைகளுக்கு, அதிகஅளவு வெங்காயம் அனுப்பினால், பலரும் பயன் அடைவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X