பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இன்று 'சக்சஸ் மந்த்ரா!' பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்கலாம்

Added : நவ 30, 2019
Advertisement

புதிய பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், தேர்வில் சாதிக்க வசதியாக, 'தினமலர்' நாளிதழ், 'சக்சஸ் மந்த்ரா - ஜெயித்துக் காட்டுவோம் 2.0' எனும் நிகழ்ச்சியை, சென்னையில் இன்று நடத்துகிறது.

'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' நிறுவனத்துடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடக்கிறது. கலைவாணர் அரங்கில், காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன், முனைவர் சங்கர சரவணன், 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' நிறுவன பேராசிரியர்கள் பங்கேற்று, பொதுத்தேர்வில் சாதிக்கும் வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு, முதலில் வரும், 1,000 மாணவர்களுக்கு, முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் மற்றும் வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படுகின்றன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இருக்கை ஒதுக்கப்படும்.இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் பங்கேற்கலாம்.கேள்வி - பதில் நேரத்தில், சிறந்த கேள்விகள் கேட்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பரிசு காத்திருக்கிறது. வெற்றிக்கான ரகசியங்களை அறியும் இந்த அற்புத நிகழ்ச்சியில், மாணவர்கள் பங்கு பெற்று பயனடையலாம்
- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X