சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கே.கே.நகரில்  கொத்தனார் கொலை

Added : நவ 30, 2019
Advertisement

கே.கே.நகர்: மது போதையில் ஏற்பட்ட தகராறில், கொத்தனாரை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபர்ட், 40. இவர், கே.கே.நகர், ஆர்.கே.சண்முகம் சாலை மற்றும் அண்ணா பிரதான சாலை சந்திப்பில், நடைபாதையில் தங்கி, கொத்தனாராக பணிபுரிந்தார். இவரது நண்பர் சிவகுமார், 35. இவரும் நடைபாதையில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவகுமார், பீர் பாட்டிலை உடைத்து, ராபர்ட்டின் கழுத்தில் குத்தினார். ராபர்ட் சம்பவ இடத்திலேயே பலியானார். கே.கே.நகர் போலீசார், சிவகுமாரை கைது செய்தனர்.விசாரணையில், ராபர்ட்டிற்கு பணம் கடன் கொடுத்ததாகவும், அதை திருப்பிக் கேட்ட போது, சிவகுமாரை அவர் அசிங்கமாக திட்டியதுடன், அவரது தாயையும் திட்டியதாகவும் தெரிகிறது.இதில் ஆத்திரம்அடைந்த சிவகுமார், பீர் பாட்டிலை உடைத்து குத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X