பொது செய்தி

தமிழ்நாடு

லேனா தமிழ்வாணனுக்கு சிறந்த பதிப்பாளர் விருது

Added : நவ 30, 2019
Advertisement
 லேனா தமிழ்வாணனுக்கு சிறந்த பதிப்பாளர் விருது

சென்னை: மணிமேகலை பிரசுரத்தின் தலைவர் லேனா தமிழ்வாணனுக்கு, சிறந்த பதிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.பொது நுாலக இயக்ககம், சென்னை மாவட்ட நுாலக ஆணைக்குழு, தேவநேயப் பாவாணர் மைய நுாலக வாசகர் வட்டம், இந்திய படைப்பாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில், 52வது தேசிய நுாலக வார விழா, சென்னையில் நேற்று நடந்தது.விழாவில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான, இளம் படைப்பாளர்; சிறந்த எழுத்தாளர்; சிறந்த படைப்பாளர் உள்ளிட்டோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.சிறந்த பதிப்பாளருக்கான விருது, மணிமேகலை பிரசுரத்தின் தலைவர் லேனா தமிழ்வாணனுக்கு வழங்கப்பட்டது. விருதை, பொது நுாலகத் துறை இணை இயக்குனர் நாகராஜ முருகன், வேளாண் துறை கூடுதல் இயக்குனர் விஜய ராணி, முன்னாள் டி.ஜி.பி., டோக்ரா ஆகியோர் வழங்கி, கவுரவித்தனர்.நிகழ்ச்சியில், பொது நுாலகத் துறையின் இணை இயக்குனர் நாகராஜ முருகன் பேசியதாவது:வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில், புத்தகங்களை வாசிப்பது குறைந்து வருகிறது. பாடப் புத்தகங்களை தாண்டி, பிற நுால்களை படித்து, அறிவை விசாலப்படுத்தும் மாணவ சமூகம் தான், கற்பனை திறனோடும், புதிய சிந்தனையோடும், மனிதாபிமானத்தோடும் இருக்கும்.இதை உணர்ந்து, நுாலகம் செல்லும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோரும், புத்தகம் படிக்கும் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X