போலீஸ் டைரி

Added : நவ 30, 2019
Advertisement

போதை வாலிபர்கள் அராஜகம்
ராயபுரம்: ராயபுரம், கிரேஸ் கார்டன் பகுதியில், கஞ்சா போதையில், வாலிபர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதாக, ராயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராயபுரம் உதவி கமிஷனர் தினகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விஜயன், 33, சூர்யா, 21, எண்ணுாரைச் சேர்ந்த மனோ, 26, ஆகியோர், சாலையில் அரிவாளை தீட்டி, தீப்பொறி ஏற்படுத்தி, பொதுமக்களை மிரட்டியது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அரிவாள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்

.சைக்கிள் திருடன் சிக்கினார்
ஜாம்பஜார்: ஜாம்பஜார், இருசப்பன் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன், 48. இரண்டு நாட்களுக்கு முன், இவரது சைக்கிள் திருடப்பட்டது. ஜாம்பஜார் போலீசார் விசாரித்தனர். இதில், ஜாம்பஜாரைச் சேர்ந்த சலீம், 58, என்பவர் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு
ஓட்டேரி: ஓட்டேரி, சந்திரயோகி சமாதி தெருவில் உள்ள, ஆறு கண்காணிப்பு கேமராக்களை, மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். ஓட்டேரி போலீசார் விசாரித்தனர். இதில், வீடுகளில் கொள்ளையடிக்க, கண்காணிப்பு கேமராக்கள் தடையாக இருப்பதால், அவற்றை, மங்களபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார், 21, செல்வராஜ், 21, சஞ்சய்குமார், 20, அஜய்குமார், 20, சந்தோஷ், 19, மற்றும் இரண்டு சிறுவர்கள் உடைத்தது தெரிய வந்தது. ஐந்து பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், சிறுவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

ரூ.2.50 லட்சம் திருட்டு
பூந்தமல்லி: மாங்காடு, ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 58; டிராவல்ஸ் உரிமையாளர். நேற்று முன்தினம், குமணன்சாவடியில் உள்ள, ஒரு வங்கியில் இருந்து, 2.50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்தார். அதை, டூ - வீலரில் வைத்து, கங்கையம்மன் கோவில் அருகே, டீ குடிக்க சென்றார். அந்த நேரம், வாகனத்தில் இருந்த பணத்தை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

நகை, பட்டு புடவை, 'அபேஸ்'
செங்குன்றம்: மாதவரம், தணிகாசலம் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன், 60; ஓய்வு பெற்ற தனியார் ஊழியர். இவர், தன் மனைவி பத்மாவதியுடன், நேற்று முன்தினம் மாலை, திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு சென்றார்.நேர்த்திக் கடனுக்காக கோவிலில் தங்கி, நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 12 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய், மூன்று வெள்ளி பொருட்கள், பட்டுப்புடவைகள் திருடு போயிருந்தன. மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற இருவர் கைது
வளசரவாக்கம்: வளசரவாக்கம் போலீசார், நேற்று முன்தினம், காரம்பாக்கத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, மதுர வாயலைச் சேர்ந்த காமேஷ், 19, கார்த்திக், 21, ஆகியோரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், இவர்கள், மதுரவாயலில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, வளசரவாக்கத்தில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு விற்றது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வீடு புகுந்து திருடியோர் கைது
திருநின்றவூர்: கெங்குரெட்டி குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 39. கடந்த, 5ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள், 4 சவரன் நகையை திருடினர். திருநின்றவூர் போலீசார் விசாரித்தனர். இதில், மாம்பாக்கம், கொளத்துாரைச் சேர்ந்த மணி, 45, கே.கே.நகர், ராஜா அண்ணாமலை நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன், 35, ஆகியோர், ஜெகதீசன் வீட்டில் திருடியது தெரிய வந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவில் உண்டியல் உடைப்பு
கே.கே.நகர்: நெசப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவில், நேற்று காலை, கோவில் நடை திறக்க குருக்கள் வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. உண்டியலில், 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. புகாரையடுத்து, கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.பாட்டிலால் சிறுவனின் கழுத்தில் வெட்டுதிருவல்லிக்கேணி: பல்லவன் சாலை, எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் சிகாமணி, 55. இவரது, 17 வயது மகனுக்கும், ஸ்டீபன், 22, என்பவருக்கும், நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஸ்டீபன், மது பாட்டிலை உடைத்து, சிறுவனின் கழுத்தில் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த சிறுவன், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருவல்லிக்கேணி போலீசார், ஸ்டீபனை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X