பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு களையெடுப்புக்கு தயாராகுது போலீஸ்

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 சென்னை ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு  களையெடுப்புக்கு தயாராகுது போலீஸ்

சென்னை: சென்னையில் உள்ள, 135 காவல் நிலைய எல்லைகளில் வசிக்கும் ரவுடிகள் குறித்து, போலீசார் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.

வட சென்னையில், வெள்ளை ரவி, சேரா, ஆசைத்தம்பி, கபிலன், 'காட்டான்' சுப்பிரமணியன், 'கேட்' ராஜேந்திரன் போன்ற ரவுடிகள் ராஜ்ஜியம் செய்து வந்தனர்.சிம்ம சொப்பனம்தென் சென்னையில், அயோத்தி குப்பம் வீரமணி, 'பங்க்' குமார் உள்ளிட்ட ரவுடிகளும், போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். இவர்களில், வீரமணி, வெள்ளை ரவி, பங்க் குமார் போன்ற ரவுடிகளை, போலீசார், 'என்கவுன்டர்' செய்து சுட்டுக் கொன்றனர். 'கேட்' ராஜேந்திரன் உள்ளிட்ட சில ரவுடிகளின் கதையை, அவர்களின் எதிரிகளே முடித்துவிட்டனர்.தற்போது, நாகேந்திரன், 'காக்கா தோப்பு' பாலாஜி, பினு, ராதாகிருஷ்ணன் போன்ற ரவுடிகள் வாலாட்டி வந்தனர். இவர்களை, போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். 'சிடி' மணி, வைரம் போன்ற ரவுடிகள் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.மேலும், புற்றீசல்கள் போல, புதுப்புது ரவுடிகளின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரவுடிகளின் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.

குற்றச்சாட்டு
இந்நிலையில், சென்னையில் உள்ள, 135 காவல் நிலைய எல்லைகளில் வசிக்கும் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் குறித்த தகவல்களை, நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர்கள், திருநாவுக்கரசு மற்றும் சுதாகர் ஆகியோர் திரட்டி வருகின்றனர்.மேலும், ரவுடிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள், அதன் தற்போதைய நிலை, தண்டனை பெற்றுத்தந்த வழக்கு விபரங்கள், நீதிமன்றங்களில் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விபரங்கள் குறித்தும் தகவல் சேகரித்து வருகின்றனர்.

இந்த தகவல்களுடன், ரவுடிகளின் படம், மொபைல் போன் எண் மற்றும் ரத்த உறவுகளின் தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்களும் சேகரிக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ரவுடிகள் இல்லாத சென்னை நகரை உருவாக்க வேண்டும் என்பதே, எங்கள் எண்ணம். அதற்கேற்ப, குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selva - CHENNAI,இந்தியா
30-நவ-201923:27:39 IST Report Abuse
Selva சென்னைக்கு நல்ல செய்தி... இது தொடர்ந்து கண் காணித்து உடனே துரித நடவடிக்கை தேவை-ரவுடிஸ்,/கொலையாளி/ கொலை உடந்தை ஆசாமி /மக்களுக்கு/பெண்களுக்கு இம்சை செய்யும் தாதகிரி// ஆகிய அனைத்து தரப்பு குற்றவாளியும் மக்கள் பயம் இல்லாமல் வாழ தண்டிக்க பட வேண்டும்,...-சென்னை வாசி..
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Delhi,இந்தியா
30-நவ-201915:35:09 IST Report Abuse
Rajesh மாமூல் சரியாக தராத ரௌடிகள் லிஸ்ட் ரேடிய பண்ணி ங்ககிட்டே சரியா வசூல் பண்ணனும்
Rate this:
Share this comment
Cancel
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
30-நவ-201909:22:24 IST Report Abuse
Thalaivar Rasigan ரௌடிகளிடம் போலீஸ் மாமூல் வாங்காமல் இருந்தால் ரௌடிகளுக்கு பயம் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X