சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருமல் சிகிச்சையில் பெண் உயிரிழப்பு? உறவினர் சாலை மறியல்

Added : நவ 30, 2019
Advertisement
 இருமல் சிகிச்சையில் பெண் உயிரிழப்பு?  உறவினர் சாலை மறியல்

பம்மல்: குன்றத்துாரை அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகரைச் சேர்ந்தவர் அற்புதம், 40. இவரது மகள் நித்யா, 20; பி.ஏ., பட்டதாரி. 26ம் தேதி, நித்யாவிற்கு, திடீரென இருமல் ஏற்பட்டது.இருமல் தொடரவே, 27ம் தேதி, அனகாபுத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர் ஊசி போட்ட சிறிது நேரத்தில், நித்யா மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதனையில், நித்யா இறந்தது தெரிய வந்தது. தவறான சிகிச்சையால் நித்யா இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.இந்நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நித்யாவின் உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர், மருத்துவரை கைது செய்யக்கோரி, நேற்று காலை, அனகாபுத்துார் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சு நடத்தியும், கலைந்து செல்லவில்லை. நீண்ட நேர பேச்சுக்கு பின், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அனகாபுத்துாரில் நேற்று காலை, ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X