சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி சூன்யம் வைத்ததால் குண்டு மிரட்டல்: குப்பை சேகரிக்கும் தொழிலாளி கல... கல...

Added : நவ 30, 2019
Advertisement

சென்னை: 'மனைவி சூன்யம் வைத்ததால், அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன். மற்றபடி, குண்டு எப்படி இருக்கும் என்று கூட தெரியாது' என, கணேசன் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எழும்பூரில், மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, இந்த மையத்திற்கு, மர்மநபர் ஒருவர், மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.அவர், 'தேனாம்பேட்டையில் உள்ள, தி.மு.க., தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் சில மணி நேரத்தில், அந்த கட்டடம் வெடித்து சிதறப்போகிறது' என, மிரட்டல் விடுத்து தொடர்பை துண்டித்து விட்டார்.உடனடியாக, இந்த தகவல் தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன், அண்ணா அறிவாலயத்தில் சோதனை செய்தனர்.பின், வெடிகுண்டு மிரட்டல் புரளி என, தெரிய வந்ததையடுத்து, மர்ம நபர் பேசிய மொபைல் போன் எண்ணை வைத்து, விபரங்களை சேகரித்த போலீசார், அவர், தி.நகர், எஸ்.பி.கார்டன் பகுதியைச் சேர்ந்த கணேசன், 37, என்பது தெரியவந்தது. நேற்று காலை, அவரை போலீசார் கைது செய்தனர்.போலீசாரிடம் கணேசன் அளித்துள்ள வாக்குமூலம்:நான் குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். மனைவி எனக்கு சூன்யம் வைத்துவிட்டாள். இதனால், மதுவுக்கு அடிமையாகிவிட்டேன். மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரம் காரணமாக, போதையில் இருந்தபோது, என் மொபைல் போனில் இருந்து, அவசர போலீஸ் எண்: 100க்கு தொடர்பு கொண்டு, அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்.அடிக்கடி அந்த கட்டடம் பக்கம் சென்று வந்ததால், ஞாபகம் வந்தது. மிரட்டல் விடுத்துவிட்டேன். மற்றபடி குண்டு எப்படி இருக்கும் என்பது கூட எனக்கு தெரியாது.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X