சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

Added : நவ 30, 2019
Advertisement

சென்னை: மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினர், 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரிய வழக்கில், பதில் அளிக்க, அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, முகலிவாக்கம், தனம் நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:என் மகன் தினா, 14, செப்டம்பரில், நண்பர்களுடன், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, தெருவிளக்கிற்காக சாலையில், பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அதில், தேங்கியிருந்த நீரில், மின் கம்பி விழுந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. அதை மிதித்த, என் மகன் மீது மின்சாரம் பாய்ந்து, உயிரிழந்தான்.சென்னை மாநகராட்சி மற்றும் மின் வாரியத்தின் அலட்சியமே, மகனின் இறப்பிற்கு காரணம். முதல்வர் அறிவித்த, 3 லட்சம் ரூபாய் தொகையும் இதுவரை கிடைக்கவில்லை. மகன் இறப்பிற்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வழக்கு, நீதிபதி, ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எஸ்.சீனிவாசன் வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, நான்கு வாரங்களுக்குள் மனுவுக்கு பதில் அளிக்குமாறு, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X