அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (8)
Advertisement

பிரேசிலியா : அமேசான் காடுகள் அழிவது அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரேசில் அதிபர் பொலசொனாரோவுக்கும் இடையே வார்த்தைப்போரும் மூண்டது. இந்நிலையில் அமேசான் காடுகளின் அழிப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள்தெரிவிக்கின்றன.





அண்மையில் பிரேசில் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் அமேசான் காடுகளின் நிலை குறித்து சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் 10100 சதுர கி.மீ. பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 43 சதவீதம் அதிகம். 2017- ஆகஸ்ட் முதல் 2018 ஜூலை வரையிலான 7033 சதுர அடி அழிக்கப்பட்டன. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம். இவ்வாறுகுறிப்பிடப்பட்டுள்ளது.





இந்த அறிக்கையை அடுத்து காடுகளை காப்பாற்ற அரசு முயற்சிக்கவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். காடுகளே நாட்டின் பலம். மரங்கள் அழிவது மனித இனம் அழிவதன் முன்னறிவிப்பு. உடனடியாக காடுகளை காப்பாற்றவும் சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்பு டுவிட்டரில்தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-நவ-201918:21:42 IST Report Abuse
Rajagopal Srinivasan ...இப்ப நம்மளால நினைச்சாலும் அமேசான் மாதிரி காடுகளை, கனவுல கூட உருவாக்க முடியாதே!
Rate this:
Share this comment
Cancel
30-நவ-201914:51:45 IST Report Abuse
நக்கல் அழியவேண்டியவை உயிர் வாழ்வதால் இருக்கவேண்டியவை அழிகின்றன... இது இயற்கைக்கும் பொருந்தும்...
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
30-நவ-201914:29:07 IST Report Abuse
Divahar நங்கள் மட்டும் தான் காடுகளை அழிக்க கூடாதா. மற்ற உலக நாடுகள் மட்டும் தான் அழைக்கலாமா. எல்லோருக்கும் தான் பொறுப்பு இருக்கிறது (அழிக்க?)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X