பொது செய்தி

இந்தியா

உலக பணக்காரர் பட்டியலில் அம்பானி 9வது இடம்

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (26)
Advertisement

புதுடில்லி; உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார்.






அமெரிக்க வணிக இதழான, போர்ப்ஸ், 'தி ரியல்டைம் பில்லியனர்ஸ் லிஸ்ட்' எனும், உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.தினசரி வர்த்தக அடிப்படையில், சொத்து மதிப்பில் ஏற்படும் அன்றாட ஏற்ற இறக்கங்களின் படி, இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இந்த பட்டியலில், 60 பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில், 4.2 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார், முகேஷ் அம்பானி.

இந்த போர்ப்ஸ் பட்டியலில், முதலிடத்தை, 'அமேசான்' நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பெசோஸ் பிடித்துஉள்ளார்.நடப்பு, 2019ம் ஆண்டுக்கான, போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி, 13 இடத்தைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.முகேஷ் அம்பானியின், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், கடந்த வியாழனன்று, 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டியதை அடுத்து, அம்பானி யின் சொத்து மதிப்பும் அதிகரித்தது. இதனால், அவர் வியாழனன்று, ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறினார்.





முதலிடத்தைப் பிடித்த அமேசான் நிறுவனரான, ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு, 8.14 லட்சம் கோடி ரூபாய். இவரை அடுத்து, 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், 7.72 லட்சம் கோடி ரூபாயுடன், இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
30-நவ-201921:47:35 IST Report Abuse
konanki //உலகில் முதல் வறுமை நாடு பாரத நாடு//dandy Vienna மிகவும் தவறான செய்தி நீங்கள் எப்போதும் இந்திய எதிர்ப்பு கருத்து தெரிவிக்கிறிர். அது இந்தியா அளித்த சுதந்திரம்.(நீங்கள் இந்தியர் அல்லாத போதும்?) ஆனால் தவறான தகவல் எழுத உமக்கு உரிமை இல்லை
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
30-நவ-201921:05:28 IST Report Abuse
konanki உதவ் தாக்கரே பவார் கட்சி காங்கிரஸ் கட்சி பதவியேற்பு விழாவில் மேடையில் இந்த முகேஷ் அம்பானி அவர் மனைவி நீடா அம்பானி உடன் . ஆதித்யா தாக்கரே வை கட்டி தழுவினார். டெலிவிஷன் காட்டுகிறது
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
30-நவ-201919:31:37 IST Report Abuse
dandy இவர் பணக்காரராக இருந்து என்ன பயன் ..உலகில் முதல் வறுமை நாடு பாரத நாடு .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X