பொது செய்தி

தமிழ்நாடு

ஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ

Added : நவ 30, 2019 | கருத்துகள் (5)
Advertisement
மின்சார ஆட்டோ, சென்னை, துவக்கம், சுற்றுச்சூழல், மாசு

சென்னை: மின்சாரத்தில் இயங்கும், 100 ஆட்டோக்களை, பொது மக்கள் பயன்பாட்டிற்காக, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.

முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர், ஆகஸ்ட், 28 முதல், செப்., 10 வரை, பிரிட்டன், அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு, சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது, 8,835 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தனர். 35 ஆயிரத்து, 520க்கும் மேற்பட்டோருக்கு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 41 நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

துபாயில், இந்திய துணை துாதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்புடன் இணைந்து, முதலீட்டாளர் சந்திப்பு நடந்தது. இதில், பெட்ரோல் ஆட்டோக்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்த, மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக, நுாறு கோடி ரூபாய் முதலீட்டில், 5,000 பேருக்கு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 'கே.எம்.சி., குழுமம் மற்றும் எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி' நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அதை செயல்படுத்தும் விதமாக, 'எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி' நிறுவனம் சார்பில், பெட்ரோல் ஆட்டோக்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில், மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றி அமைக்கப்பட்டன.

முதல்கட்டமாக, சென்னையில், நுாறு மின்சார ஆட்டோக்களை, பொது மக்கள் பயன்பாட்டிற்காக, துவக்கி வைக்கும் விழா, நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., நான்கு மின்சார ஆட்டோக்களை, கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'எம் ஆட்டோ' குழுமத்தின் தலைவர் மன்சூர் அலிகான் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
03-டிச-201916:10:38 IST Report Abuse
Endrum Indian அதை பாட்டரி சார்ஜ் செய்யும்போது தான் அதன் கஷ்டம் தெரியும் 1) பவர் கனெக்ஷன் 2) குறைந்தது 6 மணிநேரம் சார்ஜ் செய்ய வேண்டும். இது ஒன்றும் பெட்ரோல் பங்கில் சென்றோமா 3 நிமிடங்களில் நிரப்பினோமா வந்தோமா என்று சொல்ல
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
03-டிச-201916:02:07 IST Report Abuse
Sampathkumar Sampath நல்லது நடந்தால் அதை விட மகிழ்ச்சி எதுவும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
02-டிச-201915:09:36 IST Report Abuse
இந்தியன் kumar ஆட்டோகட்டணங்கள் நெறிப்படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X