சித்தராமையா, குமாரசாமி மீது தேசதுரோக வழக்கு

Added : நவ 30, 2019
Share
Advertisement
பெங்களூரு: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருமான வரித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உட்பட பலர் மீது பெங்களூரு காவல் நிலையத்தில் தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் சமயத்தில் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள தலைவர்கள் வீடு
kumaraswamy, siddaramaiah,சித்தராமையா, குமாரசாமி, தேசதுரோக வழக்கு

பெங்களூரு: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருமான வரித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உட்பட பலர் மீது பெங்களூரு காவல் நிலையத்தில் தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் சமயத்தில் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள தலைவர்கள் வீடு அலுவலகங்களில் மார்ச் 27, 28ல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் ரொக்கம் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் நேரம் என்பதால் தங்கள் வேட்பாளர்கள் குறித்து வாக்காளர்களிடையே அவப்பெயர் ஏற்படுத்த மத்திய பா.ஜ. அரசு வருமான வரித் துறை மூலம் மிரட்டுவதாக இரு கட்சித் தலைவர்களும் குற்றஞ்சாட்டினர். மேலும் பெங்களூரு குயின்ஸ் சாலையிலுள்ள கர்நாடக மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்போதைய முதல்வர் குமாரசாமி துணை முதல்வர் பரமேஸ்வர் காங். முன்னாள் முதல்வர் சித்தராமையா உட்பட பலர் போராட்டம் நடத்தினர்; வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.


latest tamil news



இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கர்நாடகத்தின் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மல்லிகார்ஜுன் பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் இம்மனு விசாரணைக்கு வந்த போது போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து குமாரசாமி, சித்தராமையா பரமேஸ்வர் ஆகியோர் மீது தேசதுரோகம் உட்பட 23 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X