பொது செய்தி

தமிழ்நாடு

பழமை மாறாது

Added : நவ 30, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 பழமை மாறாது

மதுரை பழங்காநத்தம் தெற்கு தெருவில் பழமையான ஊர் சாவடி ஒன்று உள்ளது. இதை 100 ஆண்டுகளுக்கு முன்பே கலைநயத்துடன் அமைத்துள்ளனர்.

கோவில் போன்று கட்டட மேற்பகுதியில் எழில்மிகு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கற்துாண்கள், செங்கற்கள் மூலம் கட்டடத்தை கட்டியுள்ளனர்.துவக்க காலத்தில் ஊர் நிகழ்ச்சிகள், நல்லது, கெட்டது குறித்து முடிவெடுக்க இங்கு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இதனால் ஊரின் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக சாவடிப்பகுதி திகழ்ந்தது. காலப்போக்கில் இதன் மகிமை மங்கியது. முதியவர்கள் மற்றும் ஆண்கள் ஓய்வெடுக்கும் இடமாக மாறியது.

இந்நிலையில், ஊரிலேயே மிகப்பழமையான கட்டடம் என்பதால் அதை பாதுகாக்க தற்போது அப்பகுதி மக்கள் தாமாக முன்வந்துள்ளனர். தங்களின் சொந்த செலவில் பராமரிப்பு பணியை துவக்கினர். கட்டடம் பள்ளத்தில் புதையாமல் இருக்க அதை அப்படியே உயர்த்த முடிவு செய்தனர். இப்பணியில் பீகாரை சேர்ந்த கட்டட நிபுணர்கள் ஈடுபட்டனர். அவர்கள் பாதுகாப்பாக ஜாக்கிகளை பயன்படுத்தி இரு அடி உயரம் வரை கட்டடத்தை உயர்த்தியுள்ளனர். பழமை மாறாமல் பராமரிக்கும் பணி தொடர்கிறது. இதற்காக பல லட்சம் ரூபாய் வரை செலவிட்டு வருகின்றனர். பழமையை பத்திரப்படுத்துவது தமிழர் மரபு அல்லவா!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
02-டிச-201904:02:36 IST Report Abuse
 nicolethomson வாழ்த்துக்கள் ஊர் மக்களே
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
01-டிச-201919:05:34 IST Report Abuse
jagan "பீகாரை சேர்ந்த கட்டட நிபுணர்கள் ஈடுபட்டனர்." - டாஸ்மாக் இதெல்லாம் செய்ய முடியாது.
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
30-நவ-201911:21:11 IST Report Abuse
s.rajagopalan இரண்டு விஷயங்கள் நிச்சயம் ...ஒன்று பனி சுத்தமாக , பயனுள்ளதாக இருக்கும் ...இரண்டு அரசியல்வாதிகள் , அதிகாரிகள் ...இவர்களின் ஊழல் இருக்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X