மஹா.,வில் இன்று நடக்குமா நம்பிக்கை ஓட்டெடுப்பு?

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (14)
Advertisement
மஹா., சட்டசபை, நடக்குமா, நம்பிக்கை ஓட்டெடுப்பு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மஹாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நேற்று பொறுப்பேற்றார். சட்டசபையில் இன்று(நவ.,30) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தவ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மஹாராஷ்டிரா முதல்வராக நேற்று முன்தினம்(நவ.,28) பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள தலைமைச் செயலகமான மந்திராலயாவுக்கு நேற்று வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த சத்திரபதி சிவாஜி மஹாராஜ் புகைப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்திய பின் எட்டாவது மாடியில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு வந்த அவர் முதல்வர் பொறுப்பை ஏற்றார். தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.முன்னதாக மும்பையில் உள்ள தன் வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு காரில் வந்த உத்தவ் தாக்கரேவுக்கு வழி நெடுகிலும் சிவசேனா கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

சில மாதங்களுக்கு முன் மும்பையில் ஆரே பகுதியில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் வாகன நிறுத்தம் அமைக்க ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த வாகன நிறுத்தம் அமைப்பதற்கு தடை விதிப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று அறிவித்தார்.


நம்பிக்கை ஓட்டெடுப்பு?


டி.,3ம் தேதிக்குள் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டு கோர முதல்வர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபையில் தனிப் பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்கள் தேவை. 'சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கு மொத்தம் 162 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் நம்பிக்கை ஓட்டெடுப்பில் உத்தவ் தாக்கரே எளிதாக வெற்றி பெறுவார்' என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஏமாற்றம்:


இதற்கிடையே மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் பா.ஜ. வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் முதல் முறையாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி என்பது குறித்து விவாதித்துள்ளனர். உத்தவ் அரசின் முதல் நடவடிக்கையே ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.


'தம்பிக்கு உதவுவார் பிரதமர் மோடி'


சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடியும், முதல்வர் உத்தவ் தாக்கரேயும் சகோதர பாசத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். மஹாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கு மத்திய அரசின் உதவி தேவை. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தன் இளைய சகோதரர் உத்தவ் தாக்கரேவுக்கு உதவுவார் என நம்புகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
30-நவ-201914:29:36 IST Report Abuse
இந்தியன் kumar மக்கள் விரும்பியது பாஜக சிவா சேனா கூட்டணியை ஆனால் நடந்தது வேறு , பெரும்பான்மை மக்கள் எண்ணங்களுக்கு மாறுபட்டு இந்த ஆட்சி அமைந்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
30-நவ-201914:27:56 IST Report Abuse
இந்தியன் kumar பாஜகவின் முதுகில் குத்திய சேனா அதட்குரிய விளைவுகளை அனுபவிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
30-நவ-201912:17:23 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை சங்கிகளுக்கு தாக்ரே நினைப்பே திகிலை கொடுக்குது போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X