மதுரை : கருமாத்துார் அருகே கோட்டையூரில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
'மரக்கன்றுகளை பராமரித்து வளர்ப்போம்' என கிராமத்தினர் உறுதி மொழி எடுத்தனர். ஊருணி கரைகளில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டன.ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி, கிராம ஊராட்சி செயலாளர் ஜெயலட்சுமி, இயற்கை ஆர்வலர் துரை விஜயபாண்டியன், முகமது தாஹா பங்கேற்றனர்.
Advertisement