கணவன் கண்முன் மனைவி பலிதிருப்புவனம்: மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 43,மனைவி முருகேஸ்வரி 38, இவர்களது ஒரு வயது பேரன் தர்ஷன். மூன்று பேரும் டூவீலரில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு மதுரை திரும்பினர். நான்கு வழிச்சாலையில் மணலுாரில் பின்னால் வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் முருகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஹெல்மெட் அணிந்திருந்தும் அதிவேகத்தில் கார் மோதியதால் பாலகிருஷ்ணனும், தர்ஷனும் காயமடைந்தனர். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.மருத்துவமனையில் தற்கொலைதிருமங்கலம்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பை சேர்ந்தவர் கண்ணன் 50. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அங்குள்ள கழிப்பறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.குண்டர் சட்டத்தில் கைது
மதுரை: ஆலங்குளம் எஸ்.வி.பி., நகர் கோபாலகிருஷ்ணன் மகன் விக்னேஷ்பாண்டி 21. கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.மின்சாரம் தாக்கி பலிபேரையூர்: ராஜபாளையம் அருகே தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் 24. டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஏ.தொட்டியபட்டியில் 'ஹாலோ பிளாக்' கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக இருந்தார். நேற்று மாலை மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கி இறந்தார். நாகையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.