ஈராக்கில் 25 பேர் சுட்டுக் கொலை: பிரதமர் பதவி விலகல்

Added : நவ 30, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ஈராக், 25 பேர், கொலை, பிரதமர், பதவி, விலகல்,iraq,

பாக்தாத்: ஈராக்கில் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பிரதமர் அடில் அப்துல் மக்தி பதவி விலகியுள்ளார்.

ஈராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தெற்கு ஈராக் பகுதியில் போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை வரவழைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலையாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

துப்பாக்கிச்சூட்டில் ஒரேநாளில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 233 பேர் படுகாயமடைந்தனர். தற்போது வரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 15,000க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஈராக்கின் மனித உரிமைகளுக்கான உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போராட்டம் வலுத்து வருவதால் பிரதமர் அடில் அப்துல் மக்தி பதவி விலகியுள்ளார். இதை, பாக்தாத்தில் போராட்டக்காரர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
30-நவ-201911:10:08 IST Report Abuse
mindum vasantham சர்வதேச அரசியலில் போராட்டம் எவ்வாறு இருக்கிறது என்று பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
30-நவ-201911:08:52 IST Report Abuse
mindum vasantham இவரு யாருன்னா சீனா - ஈரான் அதிபர் , சர்வதேச அரசியல் எவ்வாறு இருக்கிறது என்று பாருங்கள்
Rate this:
Share this comment
mindum vasantham - madurai,இந்தியா
30-நவ-201915:17:30 IST Report Abuse
mindum vasanthamஈரான் சீனா ஆதரவு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X