பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்திற்கு உதவிய மதுரை

Added : நவ 30, 2019
Advertisement

மதுரை : விழுப்புரம் மாவட்டம் சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் 45. ஆதரவற்ற நிலையில் அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் 10 ஆண்டுகளாக தங்கியிருந்தார். சில வாரங்களுக்கு முன் காலில் அடிபட்டது.

சிகிச்சை எடுக்காததால் அழுகியது. இலவசமாக சிகிச்சை அளிப்பவர்கள் குறித்து கூகுளில் தேடி அப்பகுதி மக்கள் மதுரை விளாச்சேரி நேத்ராவதி வலி நீக்கியல் மையம் டாக்டர் பாலகுருசாமியை தொடர்பு கொண்டனர்.நேற்று மாலை மையத்திற்கு வரவழைக்கப்பட்ட சடையனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் கூறுகையில், ''கால் அழுகி, புழுக்கள் ஏற்பட்டுள்ளன. முதற்கட்ட சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X