பொது செய்தி

இந்தியா

அரசு பங்களாவை காலி செய்கிறார் பட்னவிஸ்

Added : நவ 30, 2019 | கருத்துகள் (1)
Advertisement
அரசு பங்களா, காலி, பட்னவிஸ்

மும்பை: மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர், தேவேந்திர பட்னவிஸ், மும்பையில் உள்ள, அரசு பங்களாவை காலி செய்து விட்டு, வேறு வீட்டில் குடியேறுகிறார். மலபார் ஹில் பகுதியில் உள்ள, 'வர்ஷா' பங்களாவில் இருந்து, சாமான்களை எடுக்கும் பணி துவங்கியுள்ளது.

மஹாராஷ்டிராவில், 23ல், பா.ஜ., முதல்வராக, இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பட்னவிஸ், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பெரும்பான்மையை நிரூபிக்க வழியில்லாததால், நான்கு நாட்களில், பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அங்கே, முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்து உள்ளது.

நாக்பூர் தொகுதி சட்டசபை உறுப்பினரான, பட்னவிஸ், 2014ல், மஹாராஷ்டிர முதல்வராக பொறுப்பேற்றதும், குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அவர் மனைவி அம்ருதா, ஆக்சிஸ் வங்கியில் மூத்த அதிகாரியாக உள்ளார்; மகள், மும்பையில் படிக்கிறார். பட்னவிஸ் குடும்பத்தினர், மும்பையிலேயே வசிக்க விரும்புகின்றனர். எனவே, வீடு தேடும் படலம் தீவிரமாக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
30-நவ-201906:22:59 IST Report Abuse
Pannadai Pandian Romba seen podaatheenga you closed the cases of corrupt Ajit pawar. What he did in turn ? He ditched you and smeared black paint on shaw and modi…..no use of you. we have to find native to you.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X