பொது செய்தி

தமிழ்நாடு

'குடுகுடு'

Added : நவ 30, 2019
Advertisement

திண்டுக்கல் : இன்றைய காலத்து இளசுகள் முப்பது வயதை தாண்டுவதற்கு முன்பே மூட்டு வலி, முதுகு வலி, பல்வலி என பல வலிகளால் முடங்கி விடுகின்றனர்.

குழந்தைகளோ ஓடியாடி விளையாடும் வயதில்... வீடியோ கேம்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி அடங்கி கிடக்கின்றனர். அதனாலயே தள்ளாத வயது வரும் முன்பாக அல்லாடிப் போகின்றனர்.இவர்களுக்கு மத்தியில் முதுமை என்பது உடலுக்கு தான். உள்ளத்திற்கு அல்ல. சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்று 77 வயதிலும் துடிப்போடு தடகள போட்டிகளில் சாதனை படைக்கிறார் திண்டுக்கல்லை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணி.

பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் குடும்பத்தினர், நண்பர்ளுடன் நேரத்தை செலவிடுவது, கோயில்கள், குளிர்தலங்கள் என சுற்றுலா செல்லவே அதிகம் விரும்புவர். ஆனால், சுப்பிரமணியோ ஓய்வுக்கு பிறகும் கூட விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்குவதில் தடம் பதித்து வருகிறார். இவரும் எந்த மாவட்டம், மாநிலங்களில் மூத்தோர் தடகள போட்டி நடந்தாலும் அங்குபோய் கோப்பையை தட்டி துாக்கி வந்திடுவார்.சமீபத்தில் தஞ்சாவூரில் 75 டூ 80 வயது மூத்தோருக்கான மாநில தடகள போட்டியில் கம்பு ஊன்றி தாவுதலில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இதேபோல் மாவட்ட, மாநில அளவில் பல விருதுகளை குவித்துள்ளார். வரும் டிச.1ல் மலேசியாவில் நடக்க உள்ள ஆசிய தடகள போட்டியில் பங்கேற்க உள்ளார்.'சுறுசுறு' சுப்பிரமணி கூறுகையில், 'தங்களுக்கு வயதாகி விட்டதாக நினைத்து யாரும் வீட்டில் முடங்கி இருக்க கூடாது. முதுமை காலத்தில் தங்களுக்கு விருப்பமானதை செய்ய வேண்டும். தங்கள் திறமையை வெளிக்காட்ட வேண்டும்.

வயதானவர்களைப் போல் குழந்தைகள், இளைஞர்கள் வீடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் வீட்டுக்கு வெளியே மைதானத்தில் விளையாட வேண்டும். விளையாட்டு பொழுதுபோக்கு மட்டுமல்ல. நல்ல உடற்பயிற்சியே மனதையும் நல்லநிலையில் வைத்திருக்கும்.இதனால் சிந்திக்கு ஆற்றல் அதிகரிப்பதுடன், பிரச்னை, சிக்கல்களில் இருந்து விடுபட புத்துணர்ச்சியுடன் சிந்திக்கவும் உதவும்.

சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். அதுபோல உடல் நன்றாக இருந்தால்தான் விரும்பியதை செயல்படுத்த முடியும். அதனால் விளையாட்டில் ஆர்வமுள்ளர்களுக்கு எப்போதும் ஆலோசனை வழங்க தயார்', என்றார். இவரை வாழ்த்த 93632 21196ல் பேசலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X