பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர்

Added : நவ 30, 2019
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறு, சகதியாக உள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் நோயாளிகள், பார்வையாளர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனை வளாகம் நுழைவுப்பகுதி, குழந்தைகள், மகப்பேறு வார்டு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. வடிகால் வசதிஇல்லாமல் மழைநீர் தேங்கி சேறும், சகதியாக கிடக்கிறது.இதனால் நோயாளிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. ஸ்டிரெச்சர், வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்காமல் தவிர்க்கவும், குண்டும், குழியுமாக உள்ள ரோட்டை செப்பனிடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X